Thursday, 27 December 2012

கஷ்டபடாமல் எப்படி வாழ்கைய ஓட்ட முடியும்

ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம் ஒருவர் கேட்டார் -எதற்காக இத்தனை கஷ்டப்படுகிறாய் ?
நான் கேட்டேன் கஷ்டபடாமல் எப்படி வாழ்கைய ஓட்ட முடியும் ?
அவர் சிரித்தபடி சொன்னார் - என்னை பார்
1 ரூபாய்க்கு அரிசி வாங்கி
உண்டு விட்டு உறங்கிவிடுவேன் .
நேரம் போகவில்லை என்றால் tv பார்பேன் .
உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் போவேன்
உயர் சிகிச்சை பெற்றுடிவேன் ராஜ மரியாதையுடன் .
உழைக்காமல் எப்படியப்பா இத்தனையும் முடியும் ?
முதலாமவர் சிரித்தபடி யார் தெரியுமா ..??
தமிழ்நாட்டு குடிமகன்
என் நாட்டில் உணவுக்கு அரிசி 1 ரூபாய் .
சமைப்பதற்கு gas அடுப்பு இலவசம்
பொழுதுபோக்கிற்கு இலவச Tv இலவச மின்சாரத்துடன்
குடும்பத்தோடு உயிர் காக்கும் உயர் சிகிச்சையும் இலவசம்...
எதற்காக உழைக்க வேண்டும் ..?
நான் கேட்டான்- உன் எதிர்கால சந்ததியின் நிலை என்ன -?
பலமாக சிரித்தபடி சொன்னான்
மனைவி பிள்ளை பெற்றால் 5000 இலவசம்
குழந்தைக்கு சத்துணவு இலவசம் , படிப்பு சீருடையுடன் மதிய உணவுடன் முட்டையும் இலவசம் , பாட புத்தகமுடன் பள்ளி செல்ல இலவச பஸ் பாசும் இலவசம்.
பெண் பருவமடைந்தால் திருமண உதவி தொகை 25000 இலவசம்,
1 பவுன் தாலியுடன் திருமண செலவும் இலவசம் ,
தேவையென்றால் மாப்பிளையுடன் பேப்பரில் விளம்பரமும் இலவசம்
மகள் பிள்ளை பெற்றால் இதே கதை தொடரும் அவள் வாழ்கையிலும்..
நான் எதற்காக உழைக்க வேண்டும்...??
வியந்து போனேன் நான் !!!
என் உயிர் தமிழகமே அவ்வளுவு காலம் தொடரும் இந்த நிலை ...??
இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு ..
ஒன்று கையுட்டு மற்றொன்று பிச்சை ..
இதில் நீ எந்த வகை ? எதை எடுத்து கொள்வது ..??
உழைக்காமல் உண்டு சோம்பேறியாய் போகிறாய் - இலவசம் நின்றால் உன் நிலைமை !!
உழைப்பவர் சேமிப்பை களவாட நீ துணிவாய்
இந்த நிலை தொடர்ந்தால் - இலவசம் வளர்ந்தால்
அமைதிபூங்கவாம் தமிழகம் கள்வர் பூமியாயை மாறும் ..
இன்னும் வெகு தொலைவில் இல்லை தமிழா விழித்தெழு - உழைத்திடு
இலவசத்தை வெறுத்திடு - அழித்திடு
தமிழகத்தை தரணியில் உயர்த்திடு !!
நாளைய தமிழகம் நம் கையில் !! உடன் பிறப்பே சிந்திப்பாய் !!!
மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி !!!

Saturday, 2 June 2012

http://picasaweb.google.com/princenrsama/WQyhe#slideshow/

Monday, 25 July 2011

இந்தியாவிற்கு தேவை ஒரு விக்கிலீக்ஸ்.

பூமிக்கு அடியில் விக்கிலீக்சின் ஆவண காப்பகம் [படங்கள் இணைப்பு]





ஸ்டாக்ஹோம்:பூமிக்கு அடியில், 30 மீட்டர் ஆழத்தில், விக்கிலீக்ஸ் இணையதளத்தின் ஆவண காப்பகம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு சர்வதேச நாடுகளின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டு, உலக அளவில் பெரும் பரபரப்பை கிளப்பிவரும் "விக்கிலீக்ஸ்' இணையதளம் ரகசிய இடத்தில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், அந்த இணையதளம் வெளியிடும் தகவல் திரட்டு அடங்கிய ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டு வரும் ரகசியம் இடம் குறித்து, தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. சுவீடன் நாட்டில் உள்ள ஸ்டாக்ஹோம் நகரின் மையப்பகுதியில், பயோனின் என்ற இடத்தில் இந்த ரகசிய இடம் அமைந்துள்ளது.பூமிக்கு அடியில், 30 மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ள இந்த ரகசிய அலுவலகம், கிரானைட் பாறைகளை குடைந்து உருவாக்கப்பட்டுள்ளது. முன்பு, வெடிபொருட்கள் உள்ளிட்டவற்றை பாதுகாக்கப்பட பயன்படுத்தப்பட்டு வந்த இந்த குகை, கடந்த 2008ல் மீண்டும் திறக்கப்பட்டது.சுவீடன் நாட்டு கட்டடக்கலை நிபுணர்கள் ஆல்பர்ட் பிரான்ஸ், லோனார்டு மற்றும் கென்னத் ஆடம்ஸ் உள்ளிட்டோர் இதை புதுப்பித்து நவீனப்படுத்தியுள்ளனர்.

ஜேம்ஸ்பாண்ட் படத்தில் வரும் பிரமாண்ட செட்டுகளை போன்றும், அதன் பாதிப்பிலும் இது உருவாக்கப்பட்டுள்ளது.மிதக்கும் கான்பரன்ஸ் ஹால், கண்ணாடி அறைகள், நீள வராந்தாக்கள், வழவழப்பான தரைகள், நவீனமான இருக்கைள் ஆகியவை இங்கு உள்ளன. மேலும், செயற்கை நீர் வீழ்ச்சிகள், செடிகள், மரவேலைபாடுகள் உள்ளிட்டவற்றை கொண்டு அழகுப்படுத்தப்பட்டுள்ளது.மின் உற்பத்தி சாதனங்களும், பல்வேறு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு கருவிகளும் இங்கு உள்ளன. இந்த ரகசிய இடத்தின் இரும்பிலான வாயில் கதவு 1.6 அடி தடிமனானது.

இந்த கதவு, கடந்த 1943ல் உருவாக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டுகளால் சேதமடையாதவாறு இந்த இடத்தில் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.விக்கிலீக்சின் கைவசம் உள்ள தகவல்கள் அனைத்தும், மிக அதிக கொள்ளளவு திறன் கொண்ட மெமரி டிஸ்க்கில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இங்குள்ள சூப்பர் சர்வர்கள் மூலம், பல்வேறு நிறுவனங்களுக்கு, விக்கிலீக்ஸ் தகவல்களை வழங்கி வருகிறது.




இந்தியாவிற்கு தேவை ஒரு விக்கிலீக்ஸ்.

Monday, 22 March 2010

சரித்திர நாயகன்

சரித்திர நாயகன்

ரொக்ஃ‍பெல்லர்.ஒரு பக்க வரலாறு

---------------------------------------------------------------------------------------

வருடம் 1863.
அதுவரை தான் சம்பாதித்து வைத்திருந்த அத்தனை பணத்தையும் ஒன்று சேர்த்து, கச்சா எண்ணெய் சுத்திகரித்து விற்கும் வியாபாரத்தில் இறங்கினார் ரொக்ஃ‍பெல்லர்.

நீராவியில் ஓடிய ரயில் மட்டுமே அப்போது பெரிய
போக்குவரத்துச் சக்தியாக விளங்கியது என்பதால், பெட்ரோலின் மகத்துவம் எவருக்கும் புரியவில்லை. ஏற்கனவே இந்தத் தொழிலில் இருந்தவர்களைவிட பெட்ரோல், மண்ணெண்ணெய் போன்றவற்றைக் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டும்; அதே நேரம், அதிகப் பணம் சம்பாதிப்பதிலும் வெற்றி பெற வேண்டும் என விரும்பினார் ரொக்ஃபெல்லர்.

உற்பத்தி இடத்திலிருந்து விற்பனை இடங்களுக்கு அனுப்புவதற்கான
ரயில் கட்டணம் மிக அதிகமாக இருந்தது. ரயில்வே நிர்வாகத்திடம் பேசி, தினமும் குறிப்பிட்ட அளவு பரல்கள் அனுப்புவதாகவும், அதற்காக கட்டணச் சலுகை தரவேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் வைக்க, நிர்வாகம் ஏற்றுக்கொண்டது.

போக்குவரத்துச் செலவு கணிசமாகக் குறையவே, விலை குறைத்து விற்பைன
செய்தார். வியாபாரம் சூடு பிடித்ததும் போட்டியில் இருந்த சில கம்பெனிகளை
அதிக விலை கொடுத்து வாங்கினார். விற்பனைக்கு மறுத்தவர்களைக் ஃப்ரன்ட்ஸாக்கி கொண்டார்.

கார்கள் கண்டுபிடிக்கப்பட்டு பெட்ரோல், டீசல் போன்ற பொருட்களின் விற்பனை உச்சத்தைத் தொட்ட 1872-ம் வருடம், அமெரிக்கா முழுவதும் ஆயில் வியாபாரம் செய்யும் ஒரே நிறுவனமாக இருந்தது ரொக்ஃபெல்லரின் ‘ஸ்டாண்டர் ஒயில் கொம்ப‌னி’தான். போட்டி நிறுவனம் இல்லை என்பதால், பணம் கொட்டோ கொட்டென்று கொட்ட, உலகின் நம்பர் வ‌ன் பணக்காரர் ஆகிவிட்டார். ‘‘கோடி கோடியாகப் பணம் குவித்துவிட்டீர்கள். இப்போது சந்தோஷம்தானா?’’ என்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது, ‘‘சந்தோஷம் என்பது பணத்தில் இல்லை; வெற்றியில்தான் இருக்கிறது!’’ என்றார்.

அமெரிக்காவில் ஒரு சாதாரண விற்பனைப் பிரதிநிதிக்கு மகனாக, 1839-ம் வருடம் பிறந்தார் ரொக்ஃபெல்லர். வறுமையான சூழலில் தொடர்ந்து படிக்க விருப்பமின்றி, தன் 16-வது வயதில் ஒரு கமிஷன் நிறுவனத்தில் ஒரு நாளைக்கு 50 சென்ட்ஸ் சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தார். தொடர்ந்து இரண்டு வருடம் கடுமையாக உழைத்தும், சம்பளம் உயரவில்லை. எனவே, ஒரு நண்பருடன் சேர்ந்து தனியாக‌ கொமிஷன் வியாபாரம் தொடங்கினார். ஓஹோவென வியாபாரம் நடந்துகொண்டு இருந்தபோதுதான், அமெரிக்காவில் கச்சா எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது
.
எதிர்காலத்தில் எண்ணெய் வியாபாரம்தான் பெரும் வளர்ச்சியடையும் என
துல்லியமாகக் கணித்த ரொக்ஃபெல்லர், 1863-ம் வருடம் அந்தத் தொழிலில்
இறங்கினார். ‘‘உனக்குப் பணம் சம்பாதிப்பதற்கு ஏன் இவ்வளவு ஆசை?’’ என்று
நண்பர்கள் கேட்டபோது, ‘‘பணம் சம்பாதிப்பதைவிட, தொழிலில் முதல்வனாக
இருக்கவே விரும்புகிறேன். சந்தோஷம் என்பது பணத்தில் இல்லை; எனக்குக்
கிடைக்கும் வெற்றியில்தான் இருக்கிறது!’’ என்றார்.

சொன்னது போவே, தொழிலில் முதல்வனாக இருந்து மிக அதிகமாகப் பணம் சம்பாதித்து, 1910 முதல் 1937 வரை உலகின் பெரும் பணக்காரராகத் திகழ்ந்தார்.
முதல் 50 வருடங்களில் சம்பாதித்த பணத்தை, அடுத்து வாழ்ந்த 48 வருடங்களில் நல்ல வழிகளில் செலவிடுவதில் அதிக ஆர்வம் காட்டினார் ரொக்ஃபெல்லர். மருத்துவ ஆராய்ச்சிக்கென ‘ரொக்ஃபெல்லர் யூனிவர்சிட்டி’, மருத்துவ சேவைக்கென ‘ரொக்ஃபெல்லர் ஃபவுண்டேஷன்’ எனப் பல்வேறு சேவை நிறுவனங்கள் தொடங்கி, அமெரிக்காவின் முன்னேற்றத்திலும் முக்கியப் பங்கு வகித்தார். தான் எதிர்பார்ததை விடவும் அதிகமாகச் சம்பாதித்து வெற்றி கண்ட ரொக்ஃபெல்லர், 100 வயது வரை வாழ வேண்டும் என்கிற தனது ஆசை மட்டும் நிறைவேறாமல், 98 வயதில் மரணம் அடைந்தார்!
---------------------------------------------------------------------------------------
நன்றி : M..சீனிவாசன்,