Monday 25 July 2011

இந்தியாவிற்கு தேவை ஒரு விக்கிலீக்ஸ்.

பூமிக்கு அடியில் விக்கிலீக்சின் ஆவண காப்பகம் [படங்கள் இணைப்பு]





ஸ்டாக்ஹோம்:பூமிக்கு அடியில், 30 மீட்டர் ஆழத்தில், விக்கிலீக்ஸ் இணையதளத்தின் ஆவண காப்பகம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு சர்வதேச நாடுகளின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டு, உலக அளவில் பெரும் பரபரப்பை கிளப்பிவரும் "விக்கிலீக்ஸ்' இணையதளம் ரகசிய இடத்தில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், அந்த இணையதளம் வெளியிடும் தகவல் திரட்டு அடங்கிய ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டு வரும் ரகசியம் இடம் குறித்து, தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. சுவீடன் நாட்டில் உள்ள ஸ்டாக்ஹோம் நகரின் மையப்பகுதியில், பயோனின் என்ற இடத்தில் இந்த ரகசிய இடம் அமைந்துள்ளது.பூமிக்கு அடியில், 30 மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ள இந்த ரகசிய அலுவலகம், கிரானைட் பாறைகளை குடைந்து உருவாக்கப்பட்டுள்ளது. முன்பு, வெடிபொருட்கள் உள்ளிட்டவற்றை பாதுகாக்கப்பட பயன்படுத்தப்பட்டு வந்த இந்த குகை, கடந்த 2008ல் மீண்டும் திறக்கப்பட்டது.சுவீடன் நாட்டு கட்டடக்கலை நிபுணர்கள் ஆல்பர்ட் பிரான்ஸ், லோனார்டு மற்றும் கென்னத் ஆடம்ஸ் உள்ளிட்டோர் இதை புதுப்பித்து நவீனப்படுத்தியுள்ளனர்.

ஜேம்ஸ்பாண்ட் படத்தில் வரும் பிரமாண்ட செட்டுகளை போன்றும், அதன் பாதிப்பிலும் இது உருவாக்கப்பட்டுள்ளது.மிதக்கும் கான்பரன்ஸ் ஹால், கண்ணாடி அறைகள், நீள வராந்தாக்கள், வழவழப்பான தரைகள், நவீனமான இருக்கைள் ஆகியவை இங்கு உள்ளன. மேலும், செயற்கை நீர் வீழ்ச்சிகள், செடிகள், மரவேலைபாடுகள் உள்ளிட்டவற்றை கொண்டு அழகுப்படுத்தப்பட்டுள்ளது.மின் உற்பத்தி சாதனங்களும், பல்வேறு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு கருவிகளும் இங்கு உள்ளன. இந்த ரகசிய இடத்தின் இரும்பிலான வாயில் கதவு 1.6 அடி தடிமனானது.

இந்த கதவு, கடந்த 1943ல் உருவாக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டுகளால் சேதமடையாதவாறு இந்த இடத்தில் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.விக்கிலீக்சின் கைவசம் உள்ள தகவல்கள் அனைத்தும், மிக அதிக கொள்ளளவு திறன் கொண்ட மெமரி டிஸ்க்கில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இங்குள்ள சூப்பர் சர்வர்கள் மூலம், பல்வேறு நிறுவனங்களுக்கு, விக்கிலீக்ஸ் தகவல்களை வழங்கி வருகிறது.




இந்தியாவிற்கு தேவை ஒரு விக்கிலீக்ஸ்.